தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
(ஒரு மாநில அரசு நிறுவனம்)
வெற்றிகள் தொடர...
l

விசாரணை

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழகத்தில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியினில் கடன்களை வழங்குகிறது. இது ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்ற உங்கள் கனவை நனவாக மாற்றும். ஒவ்வொரு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தனது திட்டங்களை வடிவமைத்து உள்ளது . நீங்கள் ஏற்கனவே இருக்கும் நிறுவனமாக அல்லது முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருப்பினும் , குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெற விரும்பினால், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உங்களுக்கு ஏற்ற ஒரு திட்டத்தை வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இக்கழகம் மத்திய மற்றும் மாநில அரசு மானியங்களுக்கான முகைமையாக செயல்படுகிறது.

எங்கள் சேவைகள் :
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திடமிருந்து பெறப்படும் கடன்களுக்கு 3% வட்டி மானியம் வழங்குதல்.
  • கடன் மற்றும் மானியத்தினை ஒற்றை கூரையின் கீழ் வழங்குதல்
  • புதிய தலைமுறை தொழில்முனைவோர் இக்கழகத்தினை எளிதாக அணுகலாம்
  • கடன் முன்கூட்டியே செலுத்தும் பட்சத்தில் அதற்கான கட்டணங்கள் இல்லை
  • வெளிப்படையான மற்றும் விரைவான செயலாக்கம்